அடடே .. பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது !!! அட மாப்பிளை இந்த முன்னணி பிரபலமா என்று அதி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக கலக்கும் ரித்திகாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.நிகழ்ச்சி தொகுப்பாளரான ரித்திகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.இந்நிகழ்ச்சியில் பாலாவுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பாலாவும், ரித்திகாவும் உண்மையில் காதலிக்கிறார்கள் என செய்திகள் பரவ, அது பொய்யான தகவல், சேர்ந்து நடித்தால் காதலர்கள் என்று கூறுவதா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என காட்டமாக பேசினார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரித்திகாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் பரவியது.
இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த ரித்திகாவுக்கு, நண்பர்கள்- குடும்பத்தினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.அவரின் பெயர் வினு என்பதும், ரித்திகா வேலை செய்யும் அதே தொலைக்காட்சியில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரித்திகா, மிஸ்ஸஸ் வினுவாகி விட்டேன், உங்களுடைய அன்பும், ஆசிர்வாதமும் தேவை என பதிவிட்டுள்ளார்.இவரின் இந்த பதிவுக்கு பலருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், சிலரோ பாலாவின் வாழ்க்கை என்னாவது என கலாய்த்தும் வருகின்றனர்.