அடடே முதல் முறையாக கணவருடன் ஜோடியாக இருக்கும் ரித்திகா !! Woww வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில், ஹீரோ-விற்கு தங்கையாக அறிமுகமானவர் தான் நடிகை ரித்விகா. அந்த சீரியலுக்கு பின் பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று புதிய அடையாளத்தையும், ரசிகர்களையும் உருவாக்கியிருந்தார். அவருடைய சிம்பிளிசிட்டிக்காகவே ரசிகர்கள் பலர் இருந்தனர். ஹீரோயின் போல் நடந்துக் கொள்ளாமல், சாதாரண பக்கத்து வீட்டுப் பெண் போல் நடந்துக் கொள்வதாலையே அவரை அனைவருக்கும் பிடிக்கும்.
இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், அவருக்கும் திருமணம் என்ற தகவல்கள் அனைத்து மீடியாவிலும் வெளியாகியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், டிடி வீட்டுக்கே சென்று முதல் பத்திரிகையை வைத்திருந்தார் ரித்விகா.அதைத் தொடர்ந்து, மாப்பிள்ளையும் விஜய் டிவியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
என்ற தகவல்கள் வந்திருந்தது. யார் மாப்பிள்ளை? என்ற புகைப்படத்தை ரித்விகாவே வெளியிடுவார் என்று காத்திருந்த நிலையில் சமீபத்தில் இனிதே திருமணம் முடிந்துள்ளது.அதன் பின் இன்று அவருடன் முதன் முதலாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் வாவ் செம்ம ஜோடி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.