அடடே .. 2 ஆண்டுகளுக்கு பின்பு மறுபடியும் சீரியலில் ரி-எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் !! அவர் யாரென்று தெரியுமா ?? இதோ முழு விபரம் உள்ளே .!!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில், மிக முக்கியமான ஒன்று பாரதி கண்ணமா. இந்த சீரியல் இப்போது இறுதிக் கட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக, டி.என்.ஏ பிரச்சனையை வைத்தே சீரியலை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்போதும் கூட 1000 அத்தியாயங்களை கடக்க வேண்டும் என்பதற்காகவே சீரியலை ஒளிப்பரப்பு செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இது முடிந்தப் பின், சீசன் 2 சீரியல் வரப் போகிறது. அதனால், சீரியலில் மறைத்து வைத்திருந்த அத்தனை உண்மைகளையும், அடுத்தடுத்து தெரியப்படுத்திக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன், பாரதி மற்றும் கண்ணமாவின் பிரிவிற்கு முக்கிய காரணமான, ஒருவர் மீண்டும் சீரியலில் வந்துள்ளார்.

அதாவது,முதன் முதலாக டி.என்.ஏ ரிப்போர்ட்டை மாற்றிய, வார்டு பாய் மீண்டும் வந்துள்ளார். அந்தக் கதாப்பாத்திரத்தில் ஆக்டர் ரேயத் குமார் என்பவர் நடித்திருந்தார். இவரின் முகமே நிறையாப் பேருக்கு மறந்துப் போயிருக்கும். அவரை வைத்து தான் கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறார்களாம்.

அது மட்டும் இல்லாமல். பாரதி கண்ணமா சீரியலின் முடிவில். கண்ணம்மா, பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இல்லை மன்னிக்காமலே விட வேண்டுமா? என்று ரசிகர்களிடம் பல இடங்களில் கருத்தும் கேட்டு வருகின்றனர். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *