அட அச்சு அசலா ஆச்சி மனோரமா போலவே இருக்கும் அவரது பேத்தி !!! என்னாது இவங்களும் ஒரு பிரபலமா ?? இதோ ..!!

மறைந்த ஆச்சி மனோரமா ஒரு இந்திய நடிகை, பின்னணிப் பாடகி மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு வரை தமிழ் மொழியில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 5000 மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். கலைமாமணி விருது பெற்றவர்.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர்.அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் 1963 கொஞ்சும் குமரி.50 படங்களில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர்

நாகேஷுடன் அவருக்கு சமமான சவாலான பாத்திரங்கள் வழங்கப்பட்டன. மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்னும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.இதோ சமூக இணையத்தில் வெளியான அவரது பேத்தியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

உங்களுக்கு வீடியோ சம்பந்தமான ஏதேனும் கருத்துகள் இருந்த வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed