அட இந்த வயதிலும் கூட இவங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலயா .. இதோ சேலையில் தேவதை போல் இருக்கும் பிரபல சீரியல் நடிகை ..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சுருதி ராஜ். இத்தொடரில் அவர் நடித்த ‘துளசி’ என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் ஆஃபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ‘அழகு’ சீரியலில் தனது குடும்பத்திற்காக போராடிவரும் ‘சுதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார். சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தங்களது மார்க்கெட்டை இழக்காமல் இருக்க திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

அதேபோல நடிகை சுருதி ராஜும் 42 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் முதன்முதலில் வெள்ளித்திரையில் ‘அக்ரஜன்’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் ஆனார்.இதைத்தொடர்ந்து அவர் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து ‘மாண்புமிகு மாணவன்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது அழகான மஞ்சள் நிற சேலை ஒன்றை உடுத்தி தேவதையை போன்று காட்சியளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed