அட இவங்க தான் நடிகர் சத்யராஜின் மனைவியா ?? இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் நடிகர் சத்யராஜ். 80 காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இவர் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தார். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் மிகவும் சிறப்பாக நடிப்பார். காமெடி மற்றும் காதலில் அசத்தக்கூடிய ஹீரோவாகவும் நடித்துக் கலக்கியுள்ளார்.
நடிகர் சத்யராஜ் 1979இல் மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிபிராஜ் என்னும் மகனும், திவ்யா எனும் மகளும் உள்ளார்கள். நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் நடிகராக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மகள் திவ்யாவை சினிமா துறையை விட்டு விலக்கிய சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணருக்கு படிக்க வைத்தார்.
சத்யராஜ் இப்பொழுதும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் போன்ற படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் உள்ளது.தற்பொழுது இவர் நடிப்பில் லவ் டுடே மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தனது மகன் மனைவி மற்றும் ஆளுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக/