அட இவங்க தான் நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியா .. இதோ புகைப்படத்தை பார்த்து க டு ம் அதி ர்ச் சியா ன ரசிகர்கள் ..!!!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் துணை கதாபாத்திரங்கள், வில்லன் என படிப்படியாக நடித்து கதாநாயகனாகி தற்பொழுது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுள்ளார். சினிமாவில் கால் பதித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிகரமாக நடிகராக இன்றும் நடித்துக் கொண்டுள்ளார்.
இவர் கட்டுடல் ஆணழகனுக்கான ‘மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ பட்டத்தை வென்றுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் ‘கண்சிமிட்டும் நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான ‘புலன் விசாரணை’ திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. இது தொடர்ந்து அவர் சினிமா எக்ஸ்பிரஸ், சேலம் விஷ்ணு, மௌனம் சம்மதம், புதுப்பாடகன், வேலை கிடைச்சிடுச்சு, புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
பல முன்னணி இயக்குனர்களின் படங்களான இந்து , நாட்டாமை, மகாபிரபு, சூரியவம்சம், நட்புக்காக என கடந்த 10 ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார்.30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராகவும், 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல்வாதியாகவும் செயல்பட்டு சரத்குமார் இரண்டு துறைகளிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தற்பொழுது இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் என்றால் அது விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தான்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்குமாறு பல புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். நடிகர் சரத்குமாருக்கு 1984ல் சாயா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்று இரு மகள்கள் உள்ளனர். இவர்களின் திருமண பந்தம் 2000ல் முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதன் பின்னரே நடிகர் சரத்குமார் நடிகர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அவரின் புகைப்படம்.