அட கடவுளே முதல் வார நாமினேஷனுக்கு தேர்வான 4 பேர் .. அந்த பிரபலங்கள் யாரென்று தெரியுமா ?? இதோ வெளியான லிஸ்ட் ..!!!

நேற்று பிக் பாஸ் 6ம் சீஸனின் முதல் நாள் என்பதால் போட்டியாளர்கள் கமல்ஹாசனை சந்தித்துவிட்டு வீட்டுக்குள் வந்து சுற்றி பார்த்துவிட்டு ஜாலியாக இருந்தனர்.முதல் நாள் தானே அதற்குள் என்ன ஆகிவிட போகிறது என எல்லோரும் கூலாக அமர்ந்திருந்த நேரத்தில் பிக் பாஸ் வந்து ஒரு அதிர்ச்சி கொடுத்தார்.

குறைவாக கவர்ந்த நான்கு பேர் யார் என எல்லோரும் ஓப்பனாக சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுத்தனர். பலரும் ஆரம்பத்தில் தயங்கினாலும் அதன் பின் எல்லோரும் பேச தொடங்கினார்கள். இறுதியில் நிவாஷினி, விக்ரமன், ஜனனி, குயின்ஸி ஆகிய நான்கு பேர் தான் குறைவாக கவர்ந்த நபர்கள் என சொல்லி தேர்வானார்கள்.

அவர்கள் நான்கு பேரும் இந்த வாரம் முழுக்க வீட்டுக்குள் வர கூடாது. அவர்களுக்கு என வெளியில் கொடுக்கப்பட்டு இருக்கும் banana bedல் தான் படுத்து தூங்க வேண்டும். சாப்பிட, தூங்க கூட அவர்கள் வீட்டுக்குள் வர கூடாது என பிக் பாஸ் அறிவித்தார்.இது மட்டுமின்றி அவர்கள் நான்கு பேரும் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.