அட தங்க மீன்கள் படத்தில் நடித்த செல்லம்மாவா இது ?? அடேங்கப்பா என்னம்மா வளர்ந்துட்டாங்களே .. இதோ ..!!
தங்கமீன்கள் படத்தில் குழந்தை செல்லம்மாவாக நடித்த நடிகை சாதானாவின் தற்போதைய புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றதோடு, வெற்றிப்படமாகவும், பல்வேறு விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது.
இதில் ஏழ்மையாக இருக்கும் தந்தைக்கும், அவரது மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தினை தத்ரூபமாக காட்டியதோடு, ரசிகர்களின் கண்களை கலங்கவும் வைத்திருந்தனர்.படத்தின் கதை ஒருபுறம் இருந்தாலும், இதில் நடித்த சாதனாவே பட வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். ஆம் அந்த அளவிற்கு
8 வயது சாதனாவின் நடிப்பு மிக அருமையாக அனைவரும் பாராட்டும் விதமாக இருந்தது.இப்படத்தினை அடுத்து சாதனா மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி நடித்த பேரன்பு படத்தில் ஸ்பெஷல் சைல்டாக நடித்து ரசிகர்களின் பட்டாளத்தினை அள்ளினார்.
ஆனால் அதன் பின்னர் இவர் என்ன ஆனார்? எந்த படத்தில் நடிக்கிறார்? என்ன செய்து கொண்டிருகிறார் என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால் தங்கமீன்கள் பட்டத்தின் போது 8 வயது குழந்தையாக இருந்த இவரின் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.