அட நடிகர் நம்பியாருக்கு மகள் இருக்காங்களா ?? அவங்க பிரபல சீரியல் நடிகையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகர் நம்பியார் இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தார் நம்பியார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற எம் என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.

1935ல் ‘பக்த ராமதாஸ்’ என்ற படத்தின் மூலம் தன் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார்.மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களிலும் நிரந்தர வில்லன் நடிகராக இடம்பெற்றார் நம்பியார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ‘வில்லனுக்கு வில்லன்’ என்ற பட்ட பெயரை இவருக்கு உண்டு.

நம்பியார் 1946ல் தன்னுடைய உறவுக்கார பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிர் இழந்தார். சமீபத்தில் இவரது மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது நம்பியாரின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் நம்பியாரின் மகள் சினேகா ஒரு பிரபல சீரியல் நடிகை ஆவார்.

இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து ‘ஆதி’ திரைப்படத்திலும் மற்றும் நடிகர் விஷாலுடன் இணைந்து ‘வெடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். வெள்ளித் திரையை தொடர்ந்து சின்ன திரையில் அகல்யா, செல்லமே போன்ற தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் ஈஸ்வரர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது இரண்டு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் நடிகை சினேகா தனது குடும்பத்துடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த குடும்ப புகைப்படம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed