அட நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றங்களா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல பிரபல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார்.

1999 இல் ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘லேசா லேசா’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திரிஷா ஒரு முன்னணி நடிகையானார்.

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் காண முடியவில்லை. தற்பொழுது மணிரத்தினம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாடலிங் துறையில் அதிகம் விருப்பம் கொண்ட த்ரிஷா 1999 இல் நடிக்க வருவதற்கு முன்னர் பட்டத்தை வென்றுள்ளார். தற்பொழுது நடிகை திரிஷா ‘மிஸ் சென்னை பட்டம்’ வென்ற போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படம் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.