அட நம்ம தேவயாணியின் மகள்களா இவங்க ?? அட அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
பிரபல முன்னணி நடிகை தேவயானி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றுகிறார். அவர் மலையாளம் மற்றும் பெங்காலி படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், சூர்ய வம்சம் மற்றும் பாரதி படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் காதல் கோட்டைக்கு சிறப்பு விருதையும் பெற்றார்.
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களது திருமணம் 2001 ஆம் ஆண்டு நடந்தது .இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார். தேவயானிக்கு அந்தியூர் தாலுகா, சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்றும் உள்ளது. பகுதிவாசிகளால் அந்த ஏரியா தேவயானி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. பிரபல நடிகர் நகுல் அவர்கள், நடிகை தேவயானியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும் . அண்மையில் தேவயானி, அவரது கணவர் ராஜ்குமார்,
மகள்கள் இனியா, பிரியங்கா ஆகியோர் ஒரு விழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே தேவயானியின் மகள்களா இது? அச்சு, அசப்பில் அப்படியே இருக்கிறாரே? என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..