பெப்சி உமா என்று சொன்னால் இன்றைக்குக் கூட இளைஞர்கள் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய அழகும், குரலும் ரசிகர்களை கட்டி இழுத்தது. மேலும், 90 கால கட்டங்களில் போன் பிரபலம் இல்லாத காலத்தில் கூட அதிக ரசிகர்களை கொண்டவர். அதோடு அவருடைய சிரிப்பு ,அழகு, குரல் என அவரை புகழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அன்றைய காலத்தில் பெப்சி உமா நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதற்கு காரணம் கொஞ்சி கொஞ்சி பேசும் உமாவின் பேச்சு தான். கிட்டத்தட்ட உமாவிற்கு ஆகவே 18 வருடங்கள் பிரபலமாக ஒளிபரப்பானது. அந்தக் காலக்கட்டங்களில் குஷ்புக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.
அதுமட்டும் இல்லாமல் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் உமாவின் தீவிர ரசிகராம். மேலும், அந்த சிறுவன் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை உமா மட்டும் தான். அதோடு இதை அவருடைய அம்மா போனில் உமாவிடம் சொல்லி இருக்கிறாராம்.
இதைக் கேட்டு நெகிழ்ந்து போய் உமா அவர்கள் அந்த சிறுவனை நேரில் சந்தித்து உள்ளார். அப்போது அந்த சிறுவன் பேப்பரில் உமா என்று எழுதியுள்ளார். இந்த அளவிற்கு பிரபலமான உமா அவர்கள் தற்போது சினிமா மற்றும் டிவியில் இருந்து விலகி ஒரு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.