அட பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாறிவிட்டாரா ?? இனி இவருக்கு பதில் இந்த முன்னணி நடிகர் தான் நடிக்கப்போகிறாரா ..?? பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற இல்லத்தரசி தனது வாழ்க்கையை கணவன் மற்றும் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறார். இருப்பினும், அவர்கள் அவளைப் பாராட்டத் தவறியபோது, ​​​​அவள் தனது சொந்த அடையாளத்தை நிறுவத் தொடங்குகிறாள்.இந்த தொடர் தான் இப்போது

ஹிட் லிஸ்டில் டாப்பில் உள்ளது. பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.தற்போது கதையில் கோபி தனது புதிய வாழ்க்கையை கஷ்டப்பட்டு கடக்க பாக்கியலட்சுமி தனது தொழில் மற்றும் குடும்பத்தை மிகவும் தைரியமாக பார்க்க தொடங்கியிருக்கிறார்.

செழியன் அப்பாவாக போகும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வர கோபியின் அப்பா தாத்தா தாத்தா என்று கூறி அவரை வெறுப்பேற்றி வருகிறார். கடந்த சில வாரங்களாக கோபியின் நடிப்பும் அட்டகாசமாக உள்ளது, ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.இப்போது சமூக வலைதளங்களில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுடன் புதியதாக சீரியல் நடிகர் சஞ்சீவ் இருப்பது போல் சில

புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கோபி வேடம் மாற்றப்பட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.ஆனால் உண்மை என்னவென்றால் ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். ரேஷ்மா ராதிகா கெட்டப்பில் இதில் நடித்ததால் ரசிகர்களிடம் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *