அட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு கோலாகலமாக நடந்த திருமணம் .. இதோ வைரலாகும் புகைப்படம் ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஓடும் சீரியல்களில் எப்போது இதை முடிப்பீர்கள் என்று ரசிகர்களே கேட்கும் தொடர் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். பிரவீன் பென்னட் இயக்கியிருக்கும் இந்த தொடர் மலையாளத்தில் வந்த கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக் ஆகும்.ஆரம்பத்தில் தொடருக்கு என்னவோ பெரிய வரவேற்பு தான் கிடைத்தது,
ஆனால் இடையில் சீரியலை நகர்த்த வேண்டும் என்றே ஏதேதோ விஷயங்களை உள்ளே புகுத்தி இயக்குனர் மக்களை வெறுக்க வைத்துவிட்டார்.இப்போது சில நாட்களாக வரும் தகவல் என்னவென்றால் விரைவில் சீரியலின் கிளைமேக்ஸ் வரும் என்பது தான். அந்த நாளுக்காக தான் பல நாட்களாக ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பியாக நடிக்கும் அகீல் என்கிற சுகேஷுக்கு திருமணம் முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .