அட மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல நடிகையின் திருமணம் .. இதோ வெளியான அழகிய திருமண புகைப்படங்கள் ..!!
சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானியின் திருமணம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி.
இதில் கியாரா அத்வானி எம்.எஸ் தோணி திரைப்படத்தில் சாக்ஷி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார். இருவருக்குமே ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து
கொள்ளப்போவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால், இந்தத் தகவல்களை மறுத்தோ அல்லது உறுதி செய்தோ எந்த ஒரு கருத்தையும் இருவர் தரப்பிலிருந்தும் வெளியிடவில்லை. இதனால், அவர்கள் காதலிப்பதை ஏறத்தாழ பலரும் உறுதியாக்கினர்.
கரண் ஜோஹரும் கியாரா அத்வானியிடம் அவரது திருமணத் திட்டங்களைப் பற்றிக் கேட்க, “நான் அதை என் வாழ்க்கையில் காண்கிறேன், ஆனால் அதை நான் காஃபி வித் கரனில் வெளிப்படுத்தவில்லை” என்று கூறினார். விக்கி கௌஷலுடன் சித்தார்த் மல்ஹோத்ரா இடம்பெற்ற எபிசோடில், கியாரா அத்வானியின் எண்ணை தனது போனில் ‘கி’ என்று சேமித்ததை முன்னாள் அவர் வெளிப்படுத்தினார்.