அண்ணாத்த பட பெரியாத்தாவா இது ?? 26 வருடத்துக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினியோடு சேர்ந்து நடிச்சுருக்காரா ?? என்ன படம் என்று தெரியுமா ?? இதோ ..!!
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினியின் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அது இப்போதும் ரஜினிக்கு பொருந்தும். இன்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவே உள்ளார் ரஜினிகாந்த்.ரஜினி ஒரு பிரமாண்டமான வர்த்தகப் பொருள். 70 வயதிலும் அவருக்கான
வேல்யூ அப்படியே இருப்பதுதான் அவரின் பலம்.கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நுட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை.
சாதாரண கண்டக்டராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சத்தில் இருக்க அவரது திறமையே காரணம். ஸ்டைலான நடிப்பால் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் ரஜினி.இப்போதும் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. சிறுத்தை சிவா இந்தப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப்படத்தின் திருப்புமுனை காட்சியே பெரியாத்தா ரோல் தான். ரஜினிக்கு படத்தில் பெரியாத்தாவாக வரும் இவர், நிஜத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட மூன்று வயது சின்னவர்.இவர் ஏற்கனவே கடந்த 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் ஒரு சின்னக் காட்சியில் நடித்து இருந்தார். அதை சூப்பர் ஸ்டாரிடமே, சூட்டிங்கின் போது பெரியாத்தா சொல்ல ரஜினியும் ரொம்பவே பாராட்டினாராம்.