பிரபல முன்னணி நடிகையான கோபிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர் கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர் ஆவார்.சேரன் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வரும் திரைப்படம் ஆட்டோகிராப்.
இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் பேவரெட் லிஸ்டில் இணைந்தவர் கோபிகா.முதலில் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என நினைத்த அவரது பயணம் 2002ல் நாயகியாக ஆக்கியது. பின் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.தமிழில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன் போன்ற படங்கள் செம ஹிட்.
நடிகை கோபிகாவின் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.நடிகை கோபிகா, 1985ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர்.சினிமா மீது ஆர்வமுள்ள கோபிகா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர்.
2002ஆம் ஆண்டு ‘பிரநயமணிதுவல்’ என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த படம் வெற்றியடைய அடுத்தடுத்து பல படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது.தமிழில், ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார்.இவரது ஆட்டோகிராப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றே சொல்லலாம்.
2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனார் .இந்த இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பது முற்றிலும் நிறுத்திவிட்டு தற்போது இவர்களை கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.