தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ் களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கையில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
நடிகை கஸ்தூரி முன்னணி பல முன்னனணி நடிகர்களுடன் தேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். மேலும் இவர் 2000 ஆம் ஆண்டில் ரவிக்குமார் என்பவரை திருமணம்செய்துக்கொண்டார்.
நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நடிகை கஸ்தூரி தனது மகளை வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் விட்டு விட்டு மகனுடன் சென்னையில் தனியாக வசித்து வருகிறார். தற்போது இவர் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மேலும் இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. Mr. Pregnant என்ற படத்தில் நடித்து வருகிறேன். அங்கு எடுத்த புகைப்படம் இது என்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்..