என்னாது இவர்தான் காமெடி நடிகர் யோகிபாபு-வின் அண்ணனா ?? அட கடவுளே இவருக்கு இப்படி ஒரு நிலையா ?? இதோ யாரும் பார்த்திராத புகைப்படம் ..!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராகவும், சோலோ ஹீரோவாகவும் இவர் நடிக்கும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கோவிலில் நடைபெற்றது.நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் யோகி பாபுவின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது அவருக்கு மொத்தம் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளார்.

இதில் இரண்டாவதாக பிறந்தவர் தான் யோகி ராஜா. இவர் தற்பொழுது ஆரணியில் வசித்து வருகிறார். நடிகர் யோகி பாபுவின் அண்ணனான யோகி ராஜா திருமணம் செய்து கொள்ளாமல் சாமியாராக வாழ்ந்து வருகிறார். தற்பொழுது நடிகர் யோகிபாபு ,நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபுவின் அண்ணனான யோகிராஜா மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ சமூக இணையத்தில் வெளியான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு-வின் அண்ணன் புகைப்படம்..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed