என்னாது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்த முல்லை இந்த பிரபல சீரியல் நடிகையா .?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் அடுத்ததாக முல்லை கதாபாத்திரத்தை ஏற்று’ பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தொடர் தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.கூட்டுகுடும்பத்தை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தொடரில் முல்லையாக நடித்துக் கொண்டிருந்தார் வி ஜே சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதைத்தொடர்ந்து முல்லையாக கதாபாத்திரத்தை ஏற்று நடிகை காவியா நடித்து வந்து கொண்டிருந்தார். தற்பொழுது அவரும் இந்த தொடரை விட்டு விலகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான ரோஷினி இக்கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . பாரதி கண்ணம்மாவை விட்டு விலகிய ரோஷினி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸில் களமிறங்குவாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.