ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருப்பது எவ்வளவு பிரச் ச னை இருக்கு என்று தெரியுமா ?? முதன் முறையாக மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த். இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.அவரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தை இயக்கினார்.
அதன் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்தையும் ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் ரஜினியின் மகளாக இருப்பதால் மிகவும் கவனிக்கப்படுவதாகவும், இதனை சமாளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். ஒரு நட்சத்திரத்தின் பிள்ளையாக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு ஸ்டாரின் மகளாக இருப்பதால் அதிக ரெஸ்பான்சிபிலிட்டி உள்ளது.
அது மட்டுமல்லாமல் பல இடங்களில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சாதாரண குழந்தைகளை விட ஸ்டாலின் பிள்ளைகள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன. அனைத்து இடங்களிலும் எல்லோரின் கண்களும் அவர்கள் மீதுதான் இருக்கும். அது மட்டுமல்லாமல் எப்போதும் எங்கள் ஒழுக்கம் குறித்து பலரும் பேசி வருவதால் அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று அவர் மனம் திறந்து பேசி உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.