சோனா ஹைடன் ஒரு இந்திய திரைப்பட நடிகை, தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றார். கோலிவுட்டில் ஐட்டம் பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர். பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அனிதாவாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். சோனா ஹைடன் ஜூன் 1, 1979 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலோ இந்தியர் மற்றும் தாய் தமிழர். அவர் கொலம்பியாவில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். UNIQ என்ற பெயரில் உலகளவில் பல ஃபேஷன் கடைகளை தொடங்கினார்.

2010 ஆம் ஆண்டிற்கான “சிறந்த தொழிலதிபர்” விருதையும் பெற்றார். வெங்கட் பிரபுவின் மனகதா திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என கூறி சோனா சர்ச்சையில் சிக்கினார். சோனா தற்போது அந்த தொழிலதிபர் அந்தஸ்தில் இருந்து இறங்காமல் தன்னுடைய கடமையை செய்து வருகிறார். அப்படி இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு நேர்காணல் பெட்டியில் ஒன்றை கூறியுள்ளார். அதாவது இவருக்கு சிறு வயதிலேயே ஒரு கெட்ட பழக்கம் இருந்ததாகவும், அதை விட்டுவிட வேண்டும் என முயற்சி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அது வேறு எதுவும் இல்லை, அவர் சிறு வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி உள்ளார். மதுவின் தாக்கம் இவரை விடாமல் அடிமையாக்கி வைத்துவிட்டது, அதை விட நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *