நடிகர் பக்ரூவின் மகளா இது? பார்க்க ஹீரோயின் போல வளர்ந்துட்டாரே .. இதோ வைர லா கும் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கின்னஸ் பக்ரூ. அஜய் குமார் என்று பெயர் இருந்தாலும் இவரை கின்னஸ் பக்ரூ என்று கூறினால் தான் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். மலையாளத் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் இவர், ஒரு திரைப்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்ததற்காக மிகவும் உயரம் குறைந்த நடிகர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அற்புதத் தீவு,காவலன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் பக்ரு, தனது மனைவி காயத்ரி மோகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்றும் அசப்பில் அவர் ஹீரோயின் போல் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *