நடிகர் விஷாலின் அண்ணி இந்த பிரபல நடிகையா ?? இதோ யாரென்று பார்த்தால் அதி ரிச் சி ஆகிடுவீங்க ..!!

நடிகர் விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான ‘திமிரு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்ற இவரது டயலாக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்றுவரை காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமின் ‘சாமுராய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக் கொண்டு குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் ‘அண்டாவ காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்தார்.

அண்மையில் இவர் நடிப்பில் ‘சுழல்’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் உடற்பயிற்சி செய்வதில் மிக ஆர்வம் கொண்டவர்.

கடினமான உடற்பயிற்சியினால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ சமூக இணையத்தில் வெளியான வீடியோ ..

 

View this post on Instagram

 

A post shared by Sriya Reddy (@sriya_reddy)

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *