நடிகை பூமிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா ?? அவர் யாரென்று தெரியுமா ?? இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!
பிரபல முன்னணி நடிகையான பூமிகா சாவ்லா ஒரு இந்திய நடிகை மற்றும் இந்திய திரைப்படங்களில் தனது பணிக்காக அறியப்பட்ட முன்னாள் மாடல் ஆவார். அவர் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் ஒரு தென் பிலிம்பேர் விருது மற்றும் ஒரு SIIMA விருதை வென்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் பூமிகா. சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் ‘முன்பே வா’ பாடல் தற்போதும் அதிகம் பேரால் ரசிக்கப்படும் ஒன்று.பூமிகா தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் தான் அதிகமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஹிட் ஆன சீதா ராமம் படத்தில் பூமிகா ஒரு ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.பூமிகா 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவரது யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு 2014ல் மகன் யாஷ் பிறந்தார்.
தற்போது மகனுக்கு 8 வயதாகும் நிலையில் பூமிகா தன் குடும்ப போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பூமிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா என பலரும் ஆச்சர்யம் அடைத்து இருக்கிறார்கள். இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க வியந்துபோயிடுவீங்க ..