நடிகை லைலாவின் மகனா இது ?? இவ்வளவு பெரிய மகனா ?? பார்க்க ஹீரோ போலவே இருக்காங்களே .. இதோ லேட்டஸ்ட் புகைப்படம் ..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கலக்கியவர் நடிகை லைலா. இவர் ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. விக்ரம், சூர்யா, அஜித், பிரபுதேவா போன்ற பிரபல தமிழ் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லைலா. அதன் பின்னர் சரியான பல வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
இவர் 2006 இல் மேஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர் தன் மகன்களுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ”உங்களுக்கு இவ்ளோ பெரிய மகன்கள் இருக்காங்களா?” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.