பூர்ணா என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்ட ஷாம்னா காசிம், ஒரு இந்திய நடிகை, தொழில்முறை நடனக் கலைஞர் மற்றும் மாடல் ஆவார். அவர் 2004 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான மஞ்சு போலொரு பெண்குட்டியில் நடிகையாக அறிமுகமானார்.அவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.சமீபத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திடீரென மோதிர மாற்றி நிச்சயத்தை முடித்து புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார். தற்போது நிச்சயத்தோடு நிறுத்திக்கொண்டுள்ளார் பூர்ணா.
திருமணத்தை நிறுத்திவிட்டீர்கள் அதர்கு என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு பூர்ணா சமீபத்தில் பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அவரது சமுகவலைத்தளத்தில் வருங்கால கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு எப்போதும் என்னுடையவர் என்ற பதிவினை போட்டுள்ளார்.
திருமணம் நிறுத்தப்பட்டதாக வந்த செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பூர்ணா. விரையில் திருமணத்திற்கான திட்டமிட்டு நடைபெறவுள்ளதாம்.
View this post on Instagram