நிறை மாத கர்ப்பமாக இருக்கும் போதே இ றந்த கணவர் !! குழந்தை பிறந்த பின் 2வது கல்யாணம் செய்கிறாரா இந்த பிரபல நடிகை ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க மேக்னா ராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 2009ல் பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
நடிகை மேகனா ராஜ், இவர் பிரபல நடிகையான பிரமிளா ஜோசய் அவர்களின் மகள். கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் இவர் மிகவும் பிரபலமானவர். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற படம் மூலம் பிரபலமானவர்.
இவர் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 2018ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன் இவர்கள் 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். ஆனால் 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார் சிரஞ்சீவி சர்ஜா.
அவர் இறக்கும் போது மேக்னா கர்ப்பமாக இருந்துள்ளார், தற்போது அவருக்கு அக்டோபர் 22ம் தேதி குழந்தையும் பிறந்துவிட்டது.இந்த நிலையில் தான் மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என தகவல்கள் வந்தன. அதற்கு மேக்னா, ஒருபக்கம் திருமணம் வேண்டாம் இந்த குழந்தையை கவனித்துக் கொள் என்கிறார்கள்.இன்னொரு பக்கம் 2வது கல்யாணம் குறித்து யோசிக்க கூறுகிறார்கள்.