பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா முக்கிய நடிகர் ?? வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!! விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் இருக்கும் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான். கணவரால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்மணி அந்த தாக்கத்தில் இருந்து வெளியே வந்து தனது குடும்பத்தை தைரியமாக எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதே கதை.குடும்பத்தில் நிறைய பிரச்சனைகளை கணவர் வெளியேறிய பின் சந்தித்து வருகிறார். இப்போது
கூட மகள் சரியான மார்க் வாங்கவில்லை, கிடைப்பதாக இருந்த கான்டிராக்ட் கிடைககவில்லை, மகன் எழில் வேலை போனது என அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திக்கிறார் பாக்கியலட்சுமி.இந்த தொடரில் செழியன் கதாபாத்திர ஆள் மாற்றம் நடந்தது, இப்போது எழில் கதாபாத்திர மாற்றம் நடக்குமோ என பேசப்படுகிறது. காரணம் எழில் வேடத்தில் நடிக்கும் விஷால் எமோன் என்ற
படத்தில் நடித்துள்ளாராம், படமும் வரும் ஜனவரி 8ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக அதனை விஷால் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதற்கு அனைவரும் வாழ்த்து கூறி வர இதற்கு மேல் தொடரில் நடிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஷாலுக்கு இந்த சீரியல் மூலம் பிரபலமடைய நிறைய பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.ஆனால் விஷால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வெளியேறுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.