மீண்டும் மாலையும், கழுத்துமாக வந்த ரவீந்தர்-மகாலட்சுமி .. வீட்டில் நடந்த விசேஷம் என்னவேன்று தெரியுமா ??
இந்த வருடத்தில் நடந்த ரவீந்தர்-மகாலட்சுமி, இவர்களின் திருமணம் மட்டும் வைரலாக பேசப்பட்டது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி இருவருமே மறுமணம் செய்துகொண்டனர். ரவீந்தர் லிப்ரா என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தாலும் அவ்வளவாக பிரபலம் இல்லை. ஆனால் மகாலட்சுமி தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர்.
இவர்கள் திருமணம் பான் இந்தியா அளவில் பேமஸ் ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர்களுடைய புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆனது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து பல தொலைக்காட்சி மற்றும் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையி, தற்போது திருமணம் முடிந்ததும் அனைவருக்கும் நடக்கும் ஒரு சடங்கு இவர்களுக்கு நடந்துள்ளது. அது என்னவென்றால், தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடக்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ரவீந்தர் அவர்கள், தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.