ம றை ந்த நடிகை மனோரமாவின் மகன் இவரா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
தற்போது திரைப்படங்களில் எத்தனையோ நடிகைகள் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். இருப்பினும் இவர்கள் சினிமாவில் நிலைத்து இருப்பது என்பது இயலாத ஒன்று. இப்படி இருக்கையில் 80-களின் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றால் அது ஒரே ஒரு நடிகைதான்.மேலும் நடிப்பிற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஒரே நடிகையும் இவர் தான்.
இவர் வாங்காத விருதுகளும் பட்டங்களும் கிடையாது எனலாம் அந்த அளவிற்கு திரைத்துறையில் ஒரு முக்கிய பங்காக இருந்தவர் தான் நாம் ஆச்சி மனோரமா அவர்கள்.ஆரம்பத்தில் மன்னார்குடியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடித்து அதன் பின் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அதை திறம்பட பயன்படுத்தி கொண்டு தற்போது
மொத்த சினிமா உலகமும் திரும்பி பார்க்கும் அளவிற்கு புகழின் உச்சியில் உள்ளவர் ஆச்சி மனோரமா.எஸ்.பி.முத்துராமன் , நாகேஷ், எம்,ஜி,ஆர், சிவாஜி கணேசன் தொடங்கி தற்போதைய இளம் நடிகர்கள் வரை இவர் நடித்திராத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம். மேலும் இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு காமெடி, ஹீரோயின், வில்லத்தனம் மற்றும் குணசித்திர
வேடங்கள் என்று இவர் ஏற்று நடிக்காத கேரக்டரே இல்லை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றிணைத்து நடிப்பதில் பெரும் திறமை கொண்டவர் ஆச்சி மனோரமா.இவர் கிட்டத்தட்ட 1500-படங்களுக்கு மேலாக நடித்துள்ளார் மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, சிங்களம் என பல மொழிகளில் நடித்து நடிப்பிற்கு ஒரு உதாரனமாக விளங்குகிறார். இவ்வாறு வெகு பிரபலமாக இருக்கும் தனது தனிப்பட்ட
வாழ்க்கையில் பல இன்னல்களையும் பல ஏமாற்றங்களையும் கடந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடன் நாடங்களில் நடித்த எஸ்.எம் ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு பூபதி எனும் மகனும் உள்ளார் இவ்வறு நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரது கணவர் இவரை பிரிந்து மறுமணம் செய்து கொண்டார்.
அதன் பின் பல வருடங்களாக தனித்து வாழ்ந்து வந்த ஆச்சி மனோரமா இறுதி காலத்தில் சரியாக கவனிக்க ஆள் இல்லாத நிலையில் மாரடைப்பால் காலமானார்.இவரது இந்த நிலை ஒட்டுமொத்த சினிமா உலகையும் மற்றும் அவரது ரசிகர்களை மீளாத்துயரத்தில் கொண்டு சேர்த்தது.இவரை போன்ற நடிகை இனி பொறந்தால் மட்டுமே எனும் அளவிற்கு நடிப்பில் பல சாதனைகளை படைத்தவர் ஆச்சி மனோரமா.மேலும் மனோரமாவை பற்றி அனைவருக்கும் தெரிந்த நிலையில் அவரது குடும்பம் பற்றி அவ்வளவாக
யாருக்கும் தெரியாத நிலையில் சமீபத்தில் அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.மேலும் ஆச்சி மனோரமாவை தொடர்ந்து தற்போது அவரது பேரனும் திரைபடங்களில் நடித்து வருகிறார். கூடிய விரைவில் மனோரமா அளவிற்கு சினிமா உலகில் பிரபலமடைவார் என எதிர்பார்க்கலாம்.