என்னாது செம்பருத்தி சீரியல் கதிர்-க்கு திருமணம் முடிந்ததா ?? அட குழந்தையும் கூட பொறந்திருச்சா !! இதோ என்ன குழந்தை என்று நீங்களே பாருங்க ..!!

செம்பருத்தி சீரியலில் ஹீரோ கார்த்திக் ராஜுவின் தம்பியாக நடிப்பவர் விஜே கதிர்வேல். இவர் நடிகர் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இவர் ‘அருண்’ என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வருகிறார். 2020இல் ஜூலை 2 ல் சிந்து என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து சத்தம் இல்லாமல் திருமணம் செய்து முடித்தார்.

லாக்டவுன் காரணமாக யாரையும் அழைக்காமல் மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை முடித்தார்.நடிகர் அருண் கதிர் தற்பொழுது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகர் கதிர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘ஆயிரம் உறவு என்னை அழைத்தாலும் ‘அப்பா’ என்ற ஒற்றை வார்த்தையில் என்னை கட்டி இழுக்க வந்த என் ஆசை மகளே… ஆயுள் முழுவதும் உன் முழுமதி முகத்தில் மலரும் புன்னகை கொண்டே எந்தன் நாட்கள் நகர வேண்டுமடி… வைரமே’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவானது வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed