கல்யாணமாகி கர்ப்பமாக இருப்பதை சீக்ரெட்டாக வைத்து குழந்தை பெற்ற பிரபல நடிகை!! அந்த நடிகை யாரென்று பார்த்தால் அதி ர்ச் சி ஆகிடுவீங்க ..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகைகள் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்த போதிலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு என்பது கிடைபதில்லை. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் தமிழ் திரையுலகை விட்டு மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு முழு முதல் காரணம் தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் வயது நடிகைகளின் வரத்து அதிகமானதே பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைத்துள்ளது எனலாம்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரபல நடிகை மியா ஜார்ஜ். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை மற்றும் சசிகுமாரின் வெற்றிவேல் போன்ற படங்கள் இவரை மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் நல்ல உயரம் கட்டழகு மேனி என அழகாக இருந்த அம்மினிக்கு ஏனோ ஒரு சில படங்களுக்கு மேல் பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இதன் காரணமாக மீண்டும் மலையாளத்திற்கே திரும்பிய அம்மிணி அங்கு 25-படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடிதுள்ளதொடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்து கொண்டார்.

அந்த வகையில் கடந்த வருடம் மே மாதம் அஸ்வின் பிலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் திருமணம் நடந்ததே பலருக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்து இருந்த மியா தற்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது மகனுக்கு லூகா ஜோசப் பிலீப் என பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.