அடடே இளம் வயதில் தளபதி விஜய் தனது மனைவியுடன் எவ்ளோ அழகா இருக்காங்களே !! இதோ பலரும் பார்த்திராத புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!! இயக்குனர் வம்சி இயக்கத்தில் 2023ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு நடிகர்.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலும், தீ பாடலும் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வீடியோ வெளியாகி வைரலானது.
இதைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற 24-ஆம் தேதி நடக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். நடிகர் விஜய் பற்றிய எந்த புகைப்படங்களும் செய்திகளும் வெளிவந்தாலும் உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது.
தற்பொழுது நடிகர் விஜய் தன்னுடைய இளம் வயதில் அவரின் மனைவியோடு இணைந்து குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ இணையத்தில் வெளியான அந்த அழகிய புகைப்படம்..