நடிகை அசினின் மகளா இது ?? அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவங்க போலயே .. இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!
பிரபல முன்னணி நடிகையான அசின் ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம்
அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமல்ஹாசனுடன் ’தசாவதாரம்’ என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என
பல மொழிகளில் நடித்து இருப்பவர் அசின். 2004ல் அவர் எம் குமரன் படம் மூலமாக கோலிவுட்டில் பிரபலமடைந்தார். பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார்.2017ல் அசின் – ராகுல் ஷர்மா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு அரின் என பெயரிட்டு இருக்கின்றனர்.பின்னர் தொடர்ந்து
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரானார். மேலும் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட அசின், நடிப்பில் இருந்து விலகி தற்போது குழந்தை மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார். அசின் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது. அவரது
புகைப்படங்களை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக அசின் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.