நடிகர் ராகவா லாரன்ஸ்-க்கு இவ்வளவு அழகான மகளா ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகராக மட்டுமின்றி இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது உதவும் குணம் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அந்த அளவிற்கு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு பிடித்த ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதுவும் முக்கியமாக முனி காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் தான் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார். இந்த நிலையில் தற்போது தற்பொழுது இவர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராகவா லாரன்ஸ் லதா தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் உள்ளார். இவர் அவ்வளவாக தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தது கிடையாது. தற்பொழுது அவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ இணையத்தில் வைரலாகும் அவரின் புகைப்படம்.