அடடே இயக்குனர் அட்லி & பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு !! என்ன குழந்தை என்று தெரியுமா ?? இதோ அவரே வெளிட்ட புகைப்படம் இதோ ..!!
இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து
கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. 2013ல் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து ‘தெறி’ எனும் படத்தை இயக்கி தெறிக்க விட்டார்.இதைத்தொடர்ந்து அவர் பாலிவுட் திரை உலக முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’
படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது .கோலிவுட்டில் கலக்கி விட்டு பாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் அட்லி.இயக்குனர் அட்லீ 2014ல் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர் தனது ரசிகர்களுக்கு அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் இவரது வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.இதைத்தொடர்ந்து இன்று பிரியாவிற்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக இயக்குனர் அட்லி மகிழ்ச்சியான பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதோ இணையத்தில் வைரலாகும் அவரின் பதிவு இதோ.
View this post on Instagram