பிக்பாஸ் பிரபலம் அசீமக்கு இவ்வளவு பெரிய மகனா ?? அடடே அப்படியே அச்சு அசலா அப்பாவ போலவே இருக்காரே !! இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்பொழுது 61 நாட்களைக் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை நாயகனாக வலம் வருபவர் அசிம். இவர் பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராங்கான போட்டியாளராக தற்பொழுது மக்களால் பார்க்கப்படுகிறார். வாராவாரம் நாமினேஷனில் இவர் பெயர் மட்டும் தப்பாது.
ஆனாலும் இவர் மக்களால் தொடர்ந்து காப்பாற்றபட்டு கொண்டே தான் வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த பிரபலத்தை கொண்டே தற்பொழுது இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.
பிக் பாஸ் வாய் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே இவர் தனது ஒரிஜினல் முகத்தை மட்டுமே காட்டிக் கொண்டு வருகிறார், நடிக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் கமலஹாசனிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பதும், ரெட் கார்ட் வாங்கி வெளியே செல்ல இருந்ததும் நாம் அனைவரும் அறிந்ததே.ஆனாலும் இவர் தற்பொழுது வரை பிக் பாஸ் வீட்டில் தனது சிறப்பான
விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஸீமின் மகன் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலாய் அப்பாவை போலவே இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க .