அட கடவுளே தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்க போகிறாரா நடிகர் கூல் சுரேஷ் ?? வெளியான தகவலை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!
சமூக வலைத்தளங்களின் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடித்த திரைப்படங்களை விட இணையத்தின் மூலம் தான் இவர் மிகப் பிரபலமாக உள்ளார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பதும் நாம் அனைவரும் அறிந்து ஒன்றே. இவரை வெள்ளிக்கிழமை நாயகன், youtube சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.
தனது திரைப்படத்தின் ரிலீஸ் அன்று தியேட்டர் வாசலுக்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து விளம்பரம் செய்வார் கூல் சுரேஷ். இவர் தற்பொழுது சென்னையில் பிவிஆர் சினிமா நிறுவனத்தின் புதிய திரையரங்கு திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘பகாசுரன் திரைப்படம் மட்டும் கொடுக்கவில்லை
என்றால் தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவர் கூறும் போது, ‘தை பிறந்துவிட்டது வழி பிறக்குமா என தெரியவில்லை. விரைவில் ஸ்கிரீனில் வருவேன் என நம்புகிறேன்.அத்தோடு வரும் 17 ம் தேதி நான் நடித்த பகாசூரன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அந்த படம் எனக்கு
வொர்க் அவுட் அனால் தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கும். நான் நடித்த காட்சிகள் எப்படி இடம்பெற்றுள்ளது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றால், சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை. நான் மிகவும் போராடிவிட்டேன். இந்த பேட்டியை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.