அடடே .. ஈரோடு மகேஷின் மகளா இது !! பார்க்க டாப் ஹீரோயின்களையே அழகுல மிஞ்சிடுவாங்க போலையே !! இதோ வெளியான புகைப்படம் ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக களமிறங்கினார். இவர் தனது திறமையினால் முன்னேறி தற்போது காமெடியன், தொகுப்பாளர், நடுவர், நடிகர் என செம பிஸியாக இயங்கிக் கொண்டுள்ளார்.
தமிழில் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்பொழுது இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டும் அல்லாது வெள்ளித்திரையிலும் ‘சிகரம் தொடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஈரோடு மகேசின் தந்தை திரு சந்திரசேகரன், தாயார் திருமதி மீனாட்சி.
இவர் தனது பள்ளி படிப்பை ஈரோட்டில் தான் முடித்தார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஈரோடு மகேஷ் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ‘அமிழ்தா’ என்ற அழகிய மகளும் உள்ளார்.இவர் எப்பொழுது மேடையில் பேசினாலும் தனது வெற்றி பயணத்திற்கு
காரணம் மூன்று பெண்கள் தான் என் தாய், மனைவி, மகள் என அடிக்கடி கூறுவார். தற்பொழுது ஈரோடு மகேசின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் ‘ஈரோடு மகேஷ் மனைவியா இவர்? அழகுள்ள ஹீரோயின்களையும் மிஞ்சிடுவாங்க போலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.