சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை நிஜத்தில் இவ்வளவு அழகா ?? முதல் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தில் இடம் பெற்ற கருப்பு நிற அங்கவை, சங்கவை கேலிக்கு பதிலடியாகத்தான் கபாலியில் கறுப்பு நிறத்தை புகழ்ந்து தள்ளும் காட்சி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பட இயக்குநர் ரஞ்சித் பதிலளித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சிவாஜி.அதுவரை இருந்த தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்தது.அந்தப்படத்தில் வருகின்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி அமைத்ததுதான் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
உங்களின் நிறத்தை பார்த்துமா காதலித்தார் என்று மாணவர்கள் கேட்பது போல கபாலியில் ஒரு காட்சி வரும். கறுப்பு வண்ணத்தின் ஈர்ப்பு பற்றி ரஜினி பதிலளிப்பார். பிறகு தனது மனைவி ராதிகா ஆப்தே தனது, நிறம் குறித்து பெருமையாக கூறியதை எடுத்து கூறுவார்.
அந்த பிளாஸ் பேக் காட்சியில், நாயகி ராதிகா ஆப்தே, ரஜினியின் நிறம் குறித்து வர்ணிக்கும்போது, “உனது கறுப்பு நிறத்தை எடுத்து என் உடலெங்கும் பூசிக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்று, கண்கள் விரிய கூறுவார்.