பிரபல முன்னணி நடிகருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கர்ப்பமா?? இதோ வெளியான செய்தியை கேட்டு வியந்துபோன ரசிகர்கள் ..!!

நரேன் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்த நரேன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சினிமாவிலும் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து அவர் மீண்டும் கோலிவுட்டில் குணச்சித்திர நடிகராக தடம் பதித்து வருகிறார்.நரேன் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஹரிதாஸுக்கும் ஒரு மகள் இருக்கிறார். நரேனின் மகள் தன்மயாவுக்கு தற்போது 14 வயதாகிறது.

இந்நிலையில் நேற்று 15வது திருமண நாளை நரேன் – மஞ்சு ஜோடி கொண்டாடிய நிலையில், மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பது தான் அது.நரேன் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் இதை அறிவித்து இருக்கும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Narain Ram (@narainraam)

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *