என்னாது .. நடிகை காஜல் பசுபதிக்கு 2-வது கல்யாணமா ?? அட மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா !!
பிரபல நடிகை காஜல் பசுபதி தமிழ்த் திரையுலகில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார். அவர் கோ, மௌனகுரு மற்றும் கதம் கதை ஆகிய படங்களில் நடித்தார். திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . சன் தொலைக்காட்சியின் கஸ்தூரி தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.
‘வசூல்ராஜா’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்துள்ளார் . இவர் டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி உள்ளார் . பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக பங்கேற்றார்.
பிரபல நடன ஆசிரியர் சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .சமூக வலைத்த ளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் ‘தனக்கு இரண்டு மாதத்தில் திருமணம் ,ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் . பரிசு பொருட்கள் எதுவும் வேண்டாம். திருமணம் செய்து கொள்ள மட்டும் யாரையாவது கூப்பிட்டு வாருங்கள்’ என்று கிண்டலாக கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.