பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் மனைவி யாரென்று தெரியுமா ?? அட இது தெரியமா இத்தனை நாளாச்சே !! இதோ ..!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்று கூறலாம். அதில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் குமரன். இவர் இந்த சீரியலுக்கு முன்னர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு நடன கலைஞரும் கூட. குமரன் சீரியல் நடிகை சுகாசினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுகாசினி ஜோடி நம்பர் ஒன்,கனா காணும் காலங்கள் உள்ளிட்ட தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சுகாசினி மற்றும் குமரன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் குமரன் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் தனது மகனின் புகைப்படத்தை இதுவரை வெளியிட்டது இல்லை.இந்நிலையில் குமரன் மற்றும் சுகாசினியின் மகனின் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.