சமீப காலமாக திருடர்களும் திருட்டுகளும் அதிகமாய் கொண்டு வருகின்றன. சட்டம் எவ்வளவு தான் கடுமையாய் இருந்தாலும் திருட்டு வேலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’. இங்கு ஒரு திருடன் எப்படி நூதன முறையில் செல்போனை திருடுகிறார் என்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ஆரணி பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் பேப்பரை வைத்து மறைத்து செல்போனை திருடிச் சென்றுள்ள காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள மேல்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறார். வேலையை வீட்டிற்கு செல்லும் முன்னர் பேக்கரிக்கு சென்று திவ்யா சில தின்பண்டங்களை வாங்கி அங்கே நின்று சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது சட்டையில் இருந்த தொலைபேசி உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். பின்னர் அவர் ஒரு பேப்பரை எடுத்து மறைத்துக் கொண்டவாறு அவர் சட்டையில் உள்ள செல்போனை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இது தெரியாமல் திவ்யா உறவினர் ஒருவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அவருக்க அழைப்பதற்காக போனை எடுக்க போன் காணவில்லை. அப்பொழுது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது செல்போன் திருடு போயிருந்தது. உடனே அவர் பேக்கரியில் இருப்பவரிடம் கூறவே சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தனர். பின்னர் போலீசில் இது குறித்து திவ்யா புகார் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். என்ன ஒரு புத்திசாலித்தனமாய் இந்த திருடன் செல்போனை திருடி உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..credit https://tamizhanmedia.net
CREDIT Behindwoods Air News