நடிகை நமீதா-வின் மகன்களா இது ?? இதோ இணையத்தில் வெளியான இரு மகன்களின் அழகான வீடியோவை நீங்களே பாருங்க ..!!
பிரபல நடிகையான நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அவர்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.கடந்த 2004-ல் வெளியான `எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நமீதா.
இதை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார், மச்சான்ஸ் என ரசிகர்களை செல்லமாக அழைக்கும் நமீதாவுக்கு ரசிகர்கள் அதிகம்.இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய காதலரான வீரேந்திர சவுத்ரியை நெருங்கிய உறவினர்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில், தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்அதில் பேசிய நமீதா, “இந்த நல்ல சந்தர்ப்பத்தில், எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார். இதோ இணையத்தில் வெளியான வீடியோவை நீங்களே பாருங்க ..
View this post on Instagram