ஹன்சிகா மோத்வானி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். ஹன்சிகா இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தேசமுதுரு,
காந்த்ரி மற்றும் மஸ்கா உள்ளிட்ட தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.
நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா தோல்வியை தழுவியுள்ளது. மஹா திரைப்படத்தில்
ஹன்சிகாவுடன் இணைந்து நடிகரும், ஹன்சிகாவின் முன்னாள் காதலருமான சிம்பு நடித்திருந்தார்.இந்நிலையில், நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். பிரபல அரசியல்வாதியின் மகனை தான், நடிகை ஹன்சிகா திருமணம்
செய்துகொள்ள போவதாக திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், மாப்பிள்ளையின் பெயர் இதுவரை வெளிவரவில்லை. விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாகவும் தகவல் கூறுகின்றனர் ஆனால், இதுகுறித்து ஹன்சிகா இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.