அட கடவுளே நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா மீண்டும் இணையமா ட்டார்களா ?? வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்பவர் தனுஷ்.கடின உழைப்பால் சூப்பர் ஹீரோவாக உயர்ந்துள்ள தனுஷ், கடந்த 2004ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.அந்த அறிவிப்பில், 18 ஆண்டுகாலமாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தோம், தற்போது இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ள நிலையில், எங்களது முடிவுக்கு மதிப்பளித்து
தனியுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அறிவித்தனர்.இந்த செய்தியால் ரஜினிகாந்த் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இருவர் வீட்டிலும் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது.
இருவரும் பிரிந்து இருந்தாலும் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. எனவே, இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அது எதுவும் உண்மையில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.ஆனால் பிரிந்தது, பிரிந்தது தான் என்று இருவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.மகன்களுக்காக மட்டும் தேவையான இடங்களில் இணைந்து வருவார்கள் என்றும் தெரிகிறது.