அட கடவுளே 42 வயதாகியும் கல்யாணம் செய்யாமல் த னிமையில் பிரபல முன்னணி சீரியல் நடிகை .. யாரென்று நீங்களே பாருங்க ..!!
சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தங்கள் மார்க்கெட்டை இழக்காமல் இருக்க 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் நடித்து வருவார்கள். அப்படி சமீபத்தில் நடிகை நயன் தாரா கூட 37 வயதில் திருமணம் செய்து கொண்டார்.ஆனால், பல நடிகைகள் இன்று வரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்கள். அதில் சின்னத்திரை
நடிகை ஸ்ருதி ராஜ்-யும் ஒருவர். அக்ரஜன் என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் மலையாளப்பெண் ஸ்ருதி ராஜ்.நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார் ஸ்ருதி ராஜ். இப்படத்தினை தொடர்ந்து, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில்
நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை பக்கம் சென்றார்.அப்படி பிரபல தொலைக்காட்சியில் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்தார். சுமார் 6 ஆண்டுகள் தென்றல் சீரியல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி சாதனை படைத்தது.அதன்பின் திருமதி செல்வம், ஆஃபிஸ்,
அபூர்வ ராகங்கள், அழகு, தாளாட்டு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார். தற்போது தாளாட்டு சீரியலில் நடித்து வரும் ஸ்ருதி ராஜ் 42 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.உங்களுக்கு 42 வயதாகிறதா என்று அவரின் இளமை தோற்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.